News Just In

10/26/2019 11:48:00 AM

கள்ளியங்காடு இந்து மயானத்தில் சிரமதானப் பணி

இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் சிரமதானப் பணி இன்று சனிக்கிழமை (26) நடைபெற்றது.

சுகாதார பிரிவிற்கு பொறுப்பான மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன்  அவர்களின் வழிப்படுத்தலின் கீழ் வட்டார உறுப்பினர் துரைராஜசிங்கம் மதன்,  இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை வாலிபர் முன்னணி உறுப்பினர்கள் இந்த சிரமதானப் பணியில் கலந்து கொண்டனர். 

No comments: