புதிய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் மலேசியாவில் வெள்ளிக்கிழமை (25) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காத்தான்குடி-03, மத்திய வீதி, 2ம் குறுக்கைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.நிஹ்லான் எனும் 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தொழில் நிமித்தம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மலேசியா சென்ற குறித்த இளைஞர் நேற்றிரவு தூக்கத்திற்கு சென்ற பின்னர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரின் சடலத்தினை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தூதரகம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: