மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளின் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு இன்று (12) கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது.
அருள் கல்வி வட்டத்தின் அனுசரணையில் 6 வருடங்களாக சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் நடாத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாண்டும் ரோஸ் சரிட்டி இணைப்பாளர் அன்ரனி ரிச்சட் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
கணிதப் பாடத்திற்கான வளவாளர்களாக சட்டத்தரணி வி.தேவசேனாதிபதி, பயிற்றப்பட்ட ஆசிரியர் எஸ்.மணிமாறன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் துதிமேகதேவன், யாழ்/ பற்றிக் கல்லூரி வரலாறு பாட ஆசிரியர் ஜெய்கணேஷ், ஆசிரியர் டீன், விஞ்ஞான பாட ஆசிரியர் ஆருஷன் ஆகியோர் மானவர்களுக்கு கருத்தரங்கினை நடத்தினர்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய திட்டமிடலுக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ச.ஹரிகரராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் சுமார் 1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
No comments: