News Just In

10/13/2019 02:27:00 PM

வந்தாறுமூலை பலாச்சோலையை சேர்ந்த யுவதி தூக்கிட்டு தற்கொலை

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பலாச்சோலை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வெற்றிவேல் வேஜினி என்ற யுவதி சனிக்கிழமை (12.10.2019) மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த யுவதி வீட்டின் சமையலறையில் துணியொன்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த யுவதியின் பிரேதம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: