News Just In

10/11/2019 08:27:00 AM

எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமானது

எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றுவருகின்றது. இன்று (11.10.2019) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பானது மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. 28 பிரதேச சபை அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக 47 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது.

இந்த பிரதேச சபைத் தேர்தலில் 53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 155 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். குறித்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். தொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும், விகிதாசார வாக்களிப்பிற்கு அமைவாக 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

47 மத்திய நிலையங்களில் அளிக்கப்படும் வாக்குகள் மாலை 7.00 மணியளவில் எண்ணப்பட்டுவிடும் எனவும் இரவு 10 மணியளவில் அனைத்து முடிவுகளையும் அறிவிக்க முடியுமென காலி மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி கே.யூ.சந்திரலால் தெரிவித்தார்.

750 அரச ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் காலி மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி தெரிவித்தார். 800 பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பொலிஸ் நடமாடும் பாதுகாப்பு சேவைகளும் இடம்பெறுகின்றன.

No comments: