முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் இருந்து மண் அகழப்பட்டபோது மனித எலும்பு எச்சங்கள் கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்தன.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை (25) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார், சட்டமருத்துவ அதிகாரி றெகான்கேரத், சட்ட வைத்திய நிபுணர் இளங்கோவன், காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர்கள் மிராட் றஹீம், க.வேந்தன், பிரதீபா புண்ணியமூர்த்தி மற்றும் தடயவியல் பொலீசார் முன்னிலையில் குறித்த மனித எலும்பு எச்சங்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
மண் அகழப்பட்டபோது மீட்கப்பட்ட மனித எச்சங்களை நீதிமன்றில் ஒப்படைத்ததன் பின்னர் குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை மேற்கொண்டு முன்னெடுப்பது தொடர்பில் நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் செயற்படவுள்ளதாக சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
No comments: