News Just In

10/07/2019 10:25:00 PM

அமெரிக்காவை அதிரவைத்த 93 தொடர் கொலைகள்

அமெரிக்காவில் இளம்பெண்கள் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாமுவேல் லிட்டில் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடுத்தடுத்து 93 கொலைகளை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளது அமெரிக்காவை கதிகலங்க வைத்துள்ளது. 1970 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரும் கொலையாளிகளாக கருதப்பட்ட, டெட் பன்டி மற்றும் ஜெஃப்ரி டாமர் ஆகியோர் செய்ததாகக் கூறப்படும் கொலைகளின் எண்ணிகையைவிட, இது அதிகம் என அமெரிக்க FBI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட விசாரணையின் பின்னணியிலேயே இக் கொலைகள் வெளியே தெரியவந்துள்ளது. அவர் செய்ததாக ஒப்புக்கொண்ட பல கொலைகளுக்கு உரிய ஆதாரத்தை நிரூபிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

No comments: