டுபாயில் அடுத்த வருடம் "எக்ஸ்போ 2020" கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் பங்குகொள்வதற்கு வசதியாக , எக்ஸ்போ 2020 கண்காட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (17) இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் மூலோபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக பிரதியமைச்சர் நலின் பண்டார, இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேற்ஸ் தூதுவர் அஹமட் அலி இப்ராஹிம் அல் முஅல்லா உட்பட பலரும் கலந்துகொண்டார்கள்.
டுபாய் "எக்ஸ்போ 2020" கண்காட்சியானது 2020 ஒக்டோபர் தொடக்கம் 2021 ஏப்பிரல் வரை நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: