News Just In

9/18/2019 07:45:00 PM

மணிக்கு 300 மைல் வேகத்தில் பறக்கும் கார்


ஒரு மணி நேரத்தில் 300 மைல் வேகத்தில் பயணிக்கும் காரில் பயணம் செய்வதற்கான சாத்தியம் உருவாகிக் கொண்டிருக்கிறது. புகாட்டி சிரான் (bugati chiron) என்ற கார் அண்மையில் மணிக்கு 305 மைல் வேகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற காரை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு தர இருப்பதாக புகாட்டி நிறுவனம் உறுதியளித்துள்ளது.

முதன்முதலாக ஆட்டோ உற்பத்தி நிறுவனம் ஒன்று 300 மைல் வேகத்தில் பயணிக்கும் 30 கார்களை மட்டும் உற்பத்தி செய்ய உள்ளது. புகாட்டி திசிரான் சூப்பர் ஸ்போர்ட் 300 பிளஸ் என்ற இக்காரின் விலை ஒருமில்லியன் டாலரை விடவும் குறைவுதான். வழக்கமான ஸ்டாண்டர்ட் புகத்தி சிரான் கார்களில் டிவோ மாடல் காரின் விலை 6 மில்லியன் டாலராகும்.

சென்டோடியசி( centodieci ) கார் விலை 9 மில்லியன் டாலர் ஆகும். இந்த மாடலில் 10 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். இதே போல் உலகிலேய மிக விலை உயர்ந்த காரான லா வோய்ட்டர் நாய்ர் - (la voiture noire) ஒருகார் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். இதன் விலை 19 மில்லியன் டாலராகும்.

No comments: