
அனுராதபுரம் புனித நகரில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை திட்டமிட்டு கலைத்த தற்போதைய அரசாங்கம் அங்கு இரண்டு இந்து கோயில்களை நிர்மாணிக்க இந்தியாவின் உதவியை பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து இன்று இம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அனுராதபுரம் புனித நகரில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்துக்கு அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் காவல்துறையும் இணைந்து எதிர்ப்பை தெரிவித்தமை திட்டமிட்ட ஒரு செயல்.
நீதிமன்றினால் கூட தடுக்க முடியாத இந்த போராட்டத்தை இந்த அரசாங்க சக்திகள் சதித்திட்டம் தீட்டி கலைத்துள்ளனர்.
அனுராதப்புரம் புனித பூமி குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதன் காரணமாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியை பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுக்கின்றேன்.
புதிய வர்த்தமானியில் பௌத்த புனித பூமி என்ற அடையாளம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், இராமர் கோயில் அமைப்பது தொடர்பான திட்ட அறிக்கையொன்று இந்திய உயர்ஸ்தானிகரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளுக்குத் இது தடையாக அமையும்.
தற்போது அப்பகுதியில் உள்ள இரண்டு இந்துக் கோயில்களில் ஒன்றை இராமர் கோயிலாக மாற்றுவது, அல்லது தனியார் காணியொன்றில் புதிய இராமர் கோயிலை அமைப்பது ஆகிய திட்டங்கள் இதில் உள்ளடங்கியுள்ளது” என கூறியுள்ளார்.
No comments: