News Just In

11/13/2026 04:35:00 PM

அநுராதபுரம் பேருந்து விபத்து: உயிரிழந்த சாரதி தொடர்பில் உண்மை காரணம் அம்பலம்

அநுராதபுரம் பேருந்து விபத்து: உயிரிழந்த சாரதி தொடர்பில் உண்மை காரணம் அம்பலம்



அநுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த உயிரிழந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி கஞ்சா மற்றும் மதுபானம் பயன்படுத்தியிருந்தமை சிறுநீர் மாதிரிப் பரிசோதனையில் உறிதியாகியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் மேற்கூறப்பட்டவைகள் உட்பட மேலும் பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி காலை, கண்டி - யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில், அநுராதபுரம் மிஹிந்தலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ரம்பேவ வெலிஓயா சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது.

இதில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சாரதி உள்ளிட்ட நால்வர் உயிரிழந்ததுடன், மேலும் 76 பயணிகள் காயமடைந்தனர்.

ஜனகபுரவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தும், அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மற்றுமொரு இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: