இக் கார்த்திகை மாதம் எமது மக்கள் இழந்த உறவுகளின் ஆன்மாக்கள் எதிர்பார்ப்பது சலுகைகளையும் பாலங்களையும் அல்ல உரிமையினையே..!
2027 வரவு செலவுத் திட்டத்தில் நடுத்தர மக்களுக்கு நேரடி நிவாரணம் இல்லை; தமிழ் தேசியப் பிரச்சினைகளும் புறக்கணிப்பு – சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நடுத்தர மக்களுக்கு நேரடியாகக் கிடைத்துள்ள நன்மைகள் என்ன என்பதை ஆராய வேண்டும். நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், வாழ்க்கைச் செலவுகளும் சடுதியாக உயர்ந்துள்ளன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தில் 13.11.2026 உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த அரசாங்கத்தையே பொறுப்பேற்றோம் என்று பிரதமர் குறிப்பிடுகிறார். ஆனால், அப்போது ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 283 ரூபாவாகக் காணப்பட்டது. தற்போது அது 330 ரூபா அளவுக்கு உயர்வடைந்துள்ளது. இதற்கு வெளிப்புறக் காரணிகளும் தாக்கம் செலுத்தியுள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும்போது, திறைசேரியின் கையிருப்பு எந்தளவுக்கு அதிகரித்துள்ளது, வெளிநாட்டு நாணயக் கையிருப்பு எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டார். ஆனால், வரி விதிப்பின் ஊடாகவே திறைசேரி நிரம்பியுள்ளது. புதிதாக முதலீடுகள் எவையும் நாட்டுக்கு வரவில்லை. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் எத்தனை சதவீதம் செலவிடப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்ற நிலையில், இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்களும் அதிகரிக்கப்படவில்லை.
2028 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள தேர்தல்களை இலக்காகக் கொண்டு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தேர்தலை இலக்காகக் கொண்டு நிவாரணங்களை வழங்கும் நோக்கில், தற்போது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை அரசாங்கம் தவிர்த்துள்ளது.
அரசாங்கம் நிவாரணங்களை வழங்கினால், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பாதிக்கப்படலாம் என நினைக்கிறதா? ஏனெனில், மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உழைக்கும்போது செலுத்தும் வரி (PAYE) திருத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் பெறும் தரப்பினருக்கு மாத்திரமே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பில் உரையாற்றிய ஜனாதிபதி, கூரைமீது சூரிய மின்கலங்களைப் பொருத்தியுள்ள சக்தி வளப் பயன்பாட்டாளர்களுக்கு 25,000 ரூபா சலுகை நிதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும்போது, 14,000 பேருக்கு மாத்திரமே இந்தச் சலுகையை வழங்க முடியும்.
ஜனாதிபதி 2030 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தையும் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும். அரச சேவையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சம்பள அதிகரிப்புகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கொடுப்பனவுகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின்னரே வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் மகன் பசியுடன் இருக்கிறார். தந்தையின் கையில் 50,000 ரூபா பணம் இருக்கிறது. உணவு வாங்குவதற்காக மகன் பணம் கேட்கும்போது, தற்போது பணம் வழங்க முடியாது, அடுத்த ஆண்டுதான் வழங்க முடியும் என்று தந்தை கூறுகிறார். இதேபோன்ற நிலைமையைத்தான் இந்த வரவு செலவுத் திட்டத்திலும் காண முடிகிறது. திறைசேரியில் நிதி இருக்குமாயின், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்க முடியாது? தேர்தலை இலக்காகக் கொண்டு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முயற்சித்தால், அதன் விளைவுகளை அரசாங்கமே எதிர்கொள்ள நேரிடும்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் சில சிறந்த விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் வரவேற்கிறோம். பாடப்புத்தகங்கள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) நீக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்களே அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் மீண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. வாழ்க்கைச் செலவுகளும் உயர்ந்துள்ளன. மக்களின் நலன்புரிச் சேவைகளை விட முக்கியமான விடயம் வேறு எதுவும் கிடையாது. வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது மாத்திரம் போதாது. ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகச் செலவிடவும் வேண்டும். அரச சேவையாளர்கள் தற்போது அச்சமடைந்துள்ளனர். இதுவே உண்மை.
தேர்தலை இலக்காகக் கொண்டு நிவாரணங்களை வழங்கும் நோக்கில், தற்போது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை அரசாங்கம் மறுத்தால், அதன் விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும்.
தமிழ் தேசியப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மௌனம்
இந்த வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின் வெளிப்பாடாகும். ஜனாதிபதி தனது உரையில் தமிழ் தேசியப் பிரச்சினைகள் குறித்து ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடவில்லை. இது துரதிர்ஷ்டவசமானதாகும்.
கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரைகளில் தமிழ் தேசியக் கேள்விகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடுகளும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தன. முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், தற்போதைய ஜனாதிபதி தனது உரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எதனையும் குறிப்பிடவில்லை.
பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேபோன்று, காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியன தொடர்பாகவும் இம்முறை கவனம் செலுத்தப்படவில்லை.
பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளகப் பொறிமுறையைப் புறக்கணித்துள்ள நிலையில், அரசாங்கம் அதே உள்ளகப் பொறிமுறையைச் சர்வதேசத்துக்கு முன்மொழிந்துள்ளது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் குறித்தும் ஜனாதிபதி ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடவில்லை. ஆறு மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. காணி விடுவிப்பு தொடர்பாகவும் ஜனாதிபதி எதனையும் குறிப்பிடவில்லை. இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசியப் பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்ளாமல் ஜனாதிபதி புறக்கணித்துள்ளார். இதற்குத் தமிழ் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாகவும் ஜனாதிபதி ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடவில்லை.
இது கார்த்திகை மாதமாகும். எமது உறவுகளை நாம் நினைவுகூர வேண்டிய மாதம். மாவீரர் துயிலும் இல்லங்களைத் துப்புரவு செய்து, எமது மக்கள் தமது உறவுகளை நினைவுகூருவார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கில் பாலங்களைக் கட்டுவதற்கான முன்மொழிவுகளை முன்வைத்துவிட்டு, தமிழ் மக்களைப் புறக்கணிப்பதையும், எமது மக்களின் அபிலாஷைகளை அலட்சியப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது மக்களின் காணிப் பிரச்சினை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
கிவுல் ஓயா திட்டத்துக்கு 14,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்காக 2027 ஆம் ஆண்டில் 2,000 மில்லியன் ரூபாவும், 2028 ஆம் ஆண்டில் 7,400 மில்லியன் ரூபாவும், 2029 ஆம் ஆண்டில் 4,600 மில்லியன் ரூபாவும் என மொத்தமாக 14,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் காணிகளையும் விவசாய நிலங்களையும் அழித்து, பிறிதொரு சமூகத்துக்கு நீர் விநியோகத்தை வழங்குவதற்காகவே கிவுல் ஓயா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
எமது மக்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. கடந்த கால அரசாங்கங்கள் எவ்வாறு செயற்பட்டனவோ, அதேபோன்றே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகிறது.
மயிலத்தமடு – மாதவனை பகுதியில் ஏனைய இனத்தவர்கள் திட்டமிட்ட வகையில் குடியமர்த்தப்படுகின்றனர். மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள காணிகள் தமிழ் மக்களுக்குக் கிடைப்பதில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில அபிவிருத்தித் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளதற்காக ஜனாதிபதிக்கு நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காகத் தமிழ் அரசியல்வாதிகள் கார்த்திகை மாதத்தைப் புறக்கணிக்கக் கூடாது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது.
மலையகத் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் துரோகம் இழைத்துள்ளது
எமது தொப்புள்கொடி உறவுகளான மலையகத் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நம்பியுள்ளனர். ஆனால், இந்த அரசாங்கம் அவர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றின் செலுத்துகைகள் தொடர்பில் மலையக மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அதற்கு தற்போதைய ஜனாதிபதி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். நாங்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். ஆனால், இந்த வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தமது சம்பளத்திலிருந்து ஒரு தொகை வரியாக அறவிடப்படுவதை மலையக மக்கள் அறியாமல் உள்ளனர். 14 சதவீத வரி அறவிடப்படுகிறது. இது முற்றிலும் தவறானதாகும்.
2042 ஆம் ஆண்டில் முடிவடையவுள்ள பெருந்தோட்டக் கம்பனிகளுடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்குப் பதிலாக, அதன் காலத்தை நீடிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தக் காலம் நீடிக்கப்பட்டால், மலையக மக்களுக்குச் சொந்தமாகக் காணி வழங்குவது என்பது ஒருபோதும் நிறைவேறாத ஒன்றாகிவிடும். ஒப்பந்தக் காலத்தை நீடிப்பதன் மூலம் மலையக மக்களின் காணி உரிமைக்கான கோரிக்கை வெறும் போராட்டமாகவே தொடரும்” என்றார்.

No comments: