2009ஆம் ஆண்டு நாரஹேன்பிட்ட பகுதியில் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் கொள்ளையிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றிய சம்பத் மனம்பேரி உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று (13) வழங்கப்படவுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி, நாரஹேன்பிட்ட சந்திக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் பிரதிவாதிகள், கிழக்கு மாகாணத்திலிருந்து அரிசி ஏற்றி வந்த தமிழ் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி கொள்ளையிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன்போது, அரிசி ஏற்றி வந்த லொறி, வர்த்தகரிடமிருந்த பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவை கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சம்பத் மனம்பேரி உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதன் தீர்ப்பை இன்று வழங்குவதற்கு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
No comments: