News Just In

9/28/2026 01:59:00 PM

கசிப்பு உற்பத்தியை தேடி அழிக்கும் சித்தாண்டி இளைஞர்கள்

கசிப்பு உற்பத்தியை தேடி அழிக்கும் சித்தாண்டி இளைஞர்கள்




கசிப்பு உற்பத்தியை தேடி அழிக்கும் சித்தாண்டி இளைஞர்கள்
மக்கள் நன்மதிப்பைப் பெற்றுவரும் இளைஞர் குழுவினரின் நடவடிக்கை
பல வீர வரலாற்றை தன்னகத்தே கொண்ட சித்தாண்டி பகுதியில், சமூக நலனில் அக்கறையுடன் செயற்பட்டு வரும் இளைஞர் குழுவொன்று தற்போது மக்களின் கவனத்தையும் நன்மதிப்பையும் பெற்றுவருகிறது.
குறிப்பாக, கசிப்பு எனப்படும் சட்டவிரோத சாராய உற்பத்தியை ஒழிக்கும் நோக்குடன், இளைஞர்கள் குழுவினர் பல்வேறு பகுதிகளில் கசிப்பு தயாரிக்கப்படும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை முற்றுகையிட்டு அழித்து வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இழுக்கு பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு இடத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டு, அங்கிருந்த உற்பத்தி நிலையத்தை தகர்த்து அழித்துள்ளனர்.

சமூகத்தில் இளைஞர்களை சீரழிக்கும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத சாராயப் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

No comments: