News Just In

9/28/2026 01:53:00 PM

மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியில் மூங்கிலாறு வெள்ளப்பாலம் அருகில் உள்ள மருதமரம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியில் மூங்கிலாறு வெள்ளப்பாலம் அருகில் உள்ள மருதமரம்  தீப்பிடித்து எரிந்துள்ளது.



மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியில் மூங்கிலாறு வெள்ளப்பாலம் அருகில் உள்ள மருதமரம் நேற்றைய தினம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
ஒரு சிலரின் அசண்டையீனமான செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த மனித சமுதாயமே பாதிக்கப்படுகின்றது.

மண்டூருக்கு செல்கின்ற பிரதான பாதையில் பன்னெடுங்காலமாக பெருவிருட்சமாக இருந்த மருதமரம் ஒரு சிலரின் அசமந்தப் போக்கினால் எரியுண்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் திரு.வி.மதிமேனன் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சபையின் ஊழியர்களைக் கொண்டு தீயினை கட்டுப்படுத்தினார். எனினும் அதிகமாக சேதமாக்கப்பட்ட நிலையில் இம்மரம் காணப்படுகின்றது. எனவே குறித் பாதையினை பயன்படுத்துகின்ற பயனாளிகள் அவதானத்துடன் பாதையை கடக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
.

No comments: