|
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04 பகுதியில் இரு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 54 வயதுடைய வேலுப்பிள்ளை பிரபாவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம். நசீல் வழங்கிய உத்தரவின் பேரில், திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: