News Just In

9/29/2026 11:46:00 AM

இலங்கையின் இந்தியா வழங்கிய அடுத்த முக்கிய உதவி - வந்திறங்கிய விமானம்

இலங்கையின் இந்தியா வழங்கிய அடுத்த முக்கிய உதவி - வந்திறங்கிய விமானம்





இலங்கையின் பொது சுகாதார அமைப்புக்கு ஆதரவாக இந்தியா மேற்கொண்டுள்ள மற்றுமொரு முக்கிய நடவடிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது.

காசநோய் சிகிச்சைக்கான மருந்துகள் அடங்கிய சுமார் 3 தொன் சரக்கு, இந்திய விமானப்படையின் C-130J ரக விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ‘எக்ஸ்’ தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் பொது சுகாதார அமைப்பிற்கு ஆதரவளிப்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், காசநோய் ஒழிப்பில் முக்கிய இடைவெளிகளை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

ஆரம்பக்கட்ட கண்டறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான அணுகல், குடும்பங்களுக்கான நிதிப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டில் உலகளவில் பதிவான புதிய காசநோய் பாதிப்புகளில் சுமார் 34 சதவீதம் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பதிவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிராந்தியத்தில் சுமார் 36 இலட்சத்து 80 ஆயிரம் பாதிப்புகளும், சுமார் 4 இலட்சத்து 33 ஆயிரம் உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: