News Just In

7/29/2026 01:40:00 PM

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கலாம்..

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கலாம்..



மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களைக் கருத்திற் கொண்டு விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், உலக சந்தையில் எரிபொருள் விலையில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இலங்கையில் அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு எதிர்பார்க்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர், மயூர நெத்திகுமார தெரிவிக்கையில், “இம்முறை மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலைத் திருத்தத்தில் நுகர்வோர் அதிக நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை மாதம் முழுவதும் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தை நிலவரத்திற்கு அமைவாக, இலங்கையில் எரிபொருள் விலையை குறைப்பதற்கான வாய்ப்புக்கள் மிக குறைவாகவே உள்ளது என்றும் மயூர நெத்திகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் மக்களுக்கு அதிக நிவாரணம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களிடத்தில் எழுந்துள்ளது.

No comments: