
ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை முழுமையாக நீக்கப்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் கட்டணம் வசூலிக்கும் திட்டம் ஒன்றை ஈரான் அறிவித்துள்ளது.
ஒரு பின்னடைவாக
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட 60 நாள் பேச்சுவார்த்தைக் காலத்திற்குப் பிறகு கட்டணம் வசூலிக்கும் திட்டம் அமுலுக்கு வரும் எனவும் ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதாகக் கூறியுள்ள ஈரான், ஹார்முஸ் நீரிணை தற்போது தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதன் வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான ஐரோப்பியக் கடற்படைத் திட்டம் வரவேற்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமையன்று ஈரான் துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா முழுமையாக நீக்கியது; அதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் தடையின்றிச் செல்லத் தொடங்கின.
ஆனால் ஈரான் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு ஹார்முஸ் நீரிணையில் முழுமையான மற்றும் நிரந்தரமான கப்பல் போக்குவரத்து சுதந்திரம் மீண்டும் நிலைநாட்டப்படும் என்று நம்பியிருந்தவர்களுக்கு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
மேலும், அந்த நீரிணை சிறப்பாக நிர்வகிக்க வேண்டியிருப்பதாகவும், அதற்குக் குறிப்பிட்ட செலவு ஏற்படும் என்றும் ஈரானின் முகமது பாகர் காலிபாஃப் விளக்கமளித்துள்ளார்.
ஆனால், சவுதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத், ஈரானின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மோதலுக்கு முன்பு அந்த நீரிணையின் நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. எந்தப் பிரச்சினைகளும் இருக்கவில்லை.
கப்பல்கள் தடையின்றிப் பயணித்தன. பாதுகாப்பு அல்லது சுற்றுச்சூழல் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. எனவே, ஒரு மோதலின் விளைவாக அதன் மீது திணிக்கப்படவுள்ள ஏதோவொரு புதிய ஏற்பாட்டை நாங்கள் தற்போது ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, தங்கள் பாதுகாப்புத் தேவைகளுக்குத் தேவைப்படும் காலம் வரை, தெற்கு லெபனானில் உள்ள பாதுகாப்பு மண்டலத்தை இஸ்ரேல் தொடர்ந்து பராமரிக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் கூறியிருந்ததற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எல்லையோரம் இஸ்ரேலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 600 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான லெபனான் நிலப்பகுதியைக் குறிப்பிட்டே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார்.
மட்டுமின்றி, இனி எக்காலத்திலும் ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை இஸ்ரேல் அனுமதிக்காது என்றும் நெதன்யாகு அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

ஆனால், தங்களுக்கு அப்படியான ஒரு எண்ணம் இல்லை என்றே பல காலமாக ஈரான் நிர்வாகம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், லெபனானின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறிப்பிடும் ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஈரான் வலியுறுத்துகிறது; இதன் மூலம், இஸ்ரேலின் வெளியேற்றத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன், ட்ரம்ப்பின் குழுவினருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதையும் அங்கீகரித்ததாக தகவல் வெளியானது.
No comments: