News Just In

6/18/2026 07:29:00 PM

உலக உணவுத்திட்டத்தின் கீழ் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

உலக உணவுத்திட்டத்தின் கீழ் உபகரணங்கள் வழங்கி வைப்பு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத் தோட்டத்தின் முறைமையினூடாக பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலும் பயனாளிகளுக்கான பெறுமதியான உபகரணங்கள் வழங்கல் நிகழ்வும் புதிய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உலக உணவுத் திட்டத்தின் தனியார் பங்குதாரர்களுக்கான முகாமையாளர் ஹொலி ஹாட்டரும், அவரது பணியணியினரும், பயனாளிகளும், அதிகாரிகளும் பங்கு பற்றியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றி அங்கு கருத்து தெரிவித்த உலக உணவு திட்ட உயர் அதிகாரி ஹொலி ஹாட்டர், திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது முறையான கண்காணிப்பு அவசியம் என்பதுடன் சிறந்த விவசாயத்தினை மேற்கொண்டு சமூதாயத்தையும் மேம்படுத்த வேண்டும் என்றார்.

நடப்பாண்டில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்ட்ட 15 பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்தினை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் 27 பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தினூடாக மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு நஞ்சற்ற போசாக்கான உணவினை பெற்றுக் கொள்ள வாய்ப்புக்கிட்டியுள்ளது.

No comments: