News Just In

6/28/2026 02:39:00 PM

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நவீன விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்து வைப்பு!

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நவீன விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்து வைப்பு



நூருல் ஹுதா உமர்

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நீண்டகால தேவையாக இருந்து வந்த நவீன விஞ்ஞான ஆய்வுகூடம், நேற்று திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிஷாத் அவர்களின் தொலைநோக்குப் பார்வை, அயராத முயற்சி மற்றும் அர்ப்பணிப்புமிக்க தலைமையின் பலனாக இந்த முயற்சி வெற்றியளித்துள்ளது.

அதிபர் ஏ.ஜி.எம். றிஷாத் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில், கல்முனை கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எச். றியாஸா பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆய்வுகூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

நிகழ்வில் விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.ஜி.எம். ஜுலூல், பகுதித் தலைவர் இசட்.எம். நூறுல் அமீன், விஞ்ஞானப் பாட ஆசிரியை திருமதி மஜீட், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

ஆய்வுகூடத்தை நவீன வசதிகளுடன் உருவாக்குவதற்கு தேவையான உபகரணங்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம். மாஹிர் மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் ஆகியோர் வழங்கி வைத்திருந்தனர்.

மேலும், அட்டாளைச்சேனை மற்றும் மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரிகளின் கட்டுறுப் பயிற்சி ஆசிரியப் பயிலுநர்களான எம்.எஸ்.எம். ஹப்ஸான், எம்.எம். மஃப்ஷான், ஜே.எச். ரிலா, ஏ.எச்.எம். ஷிமான், கதீஸா உம்மா மற்றும் ஏ.எஸ்.எப். ரிஸ்கா ஆகியோரின் அர்ப்பணிப்பான பங்களிப்பும் ஆய்வுகூடத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் விஞ்ஞான சுய ஆக்கங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்களும் இடம்பெற்றது

No comments: