News Just In

6/28/2026 06:08:00 AM

கல்முனையில் பாதயாத்திரை நாயை எட்டி உதைத்த நபர் உடனடி கைது பொலிஸாரின் துரித நடவடிக்கை.!!

 கல்முனையில் பாதயாத்திரை நாயை எட்டி உதைத்த நபர் உடனடி  கைது பொலிஸாரின் துரித நடவடிக்கை.!!



கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் பயணித்த 'சுப்பிரமணியன்' என்ற நாய் மீது கல்முனையில் வைத்து அநாகரிகமான முறையில் தாக்குதல் நடத்திய நபர், கல்முனை பொலிஸாரால்  (27) சனிக்கிழமை மாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் இணைந்து நீண்டதூரம் பயணித்து வரும் 'சுப்பிரமணியன்' என்று அழைக்கப்படும் நாய், இன்று மாலை கல்முனைக்குடி பிரதான வீதியில் அஷ்ரப் வைத்தியசாலைக்கு (மடுவத்தை) அருகில் வந்துள்ளது.

இதன்போது, அங்குள்ள பழக்கடை ஒன்றின் உரிமையாளரால் அந்த வாயில்லா ஜீவன் மிகக் கொடூரமான முறையில் எட்டி உதைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளானது.

இந்தக் கொடூரச் செயல் தொடர்பான காணொளிகள் மற்றும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் மிருகவளர்ப்பு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் கடுமையான கண்டனங்களையும் தோற்றுவித்தது. மனிதநேயமற்ற இந்தச் செயலுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் மிக வேகமாக வைரலாகின.

இதனைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட கல்முனை பொலிஸார், சம்பந்தப்பட்ட நபரை இனங்கண்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
 

No comments: