மட்டக்களப்பு சிசிலியா மகளிர் தேசியக் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை 27.06.2026 விமர்சையாக இடம்பெற்றது.
இதனையொட்டி கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி நிதாஞ்சலி தலைமையில் விழிப்புணர்வு நடைபவனி, 150 வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர் வெளியீடு, மாணவர்களின் கலை நிகழ்வுகள், பாடசாலையின் வளர்ச்சிக்காக அளப்பரிய சேவையாற்றிய கல்லூரியின் முன்னாள்; அதிபர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள், கல்லூரியில் கடமையாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்லூரியின் பணியாளர்கள் பலரும் பாராட்டப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வுகளில், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. அகஸ்டின் நவரெட்ணம் அடிகளார், இலங்கை அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் மாகாண மேலாளர் அருட்சகோதரி நிலாந்தி, மாகாண முன்னாள் மேலாளர் அருட்சகோதரி மேரி லூர்துஸ், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலகர் கலாநிதி டபிள்யூ.ஜே. ஜெயராஜ் உட்பட கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் பாடசாலை நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

No comments: