News Just In

5/18/2026 12:04:00 PM

தேசிய உயரிய விருதை இருமுறை வென்ற ஊடக ஆளுமை 'மட்டு. துஷாரா' கௌரவம்!

தேசிய உயரிய விருதை இருமுறை வென்ற ஊடக ஆளுமை 'மட்டு. துஷாரா' கௌரவம்!

அபு அலா

இலங்கை பத்திரிகைப் பேரவையின் தேசிய விருதினை இருமுறை வென்ற கிழக்கு மாகாணத்தின் ஒரே பெண் ஊடக ஆளுமை திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு.துஷாரா)மட்டு. ஊடக நிறுவனம் சார்பில் சிறப்பு கெளரவம் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் நேற்று (17) நடைபெற்ற கவிமகள் ஜெயவதியின் இரு நூல்கள் வெளியீட்டு இந்நிகழ்வில், மட்டு. ஊடக நிறுவனம் சார்பாக, ஆதித்தி நெசவு நிலையத்தின் பணிப்பாளரும், துணை ஆசிரியரும், தொகுப்பாளினியுமான திருமதி கீதா சுதாகரன் அவர்கள், ஊடக ஆளுமை மட்டு. துஷாரா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

வீரகேசரி, தமிழன், தினக்குரல் உள்ளிட்ட பல தேசியப் பத்திரிகைகள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ச்சியாக எழுதிவரும் இவர், குறிப்பாக 'தமிழன்' வார இதழில் மருத்துவக் கட்டுரைகள் மூலம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி, மட்டக்களப்பு மற்றும் சீலாமுனை மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ளமைக்காக இந்த உயரிய கௌரவிப்பு வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments: