News Just In

5/18/2026 12:08:00 PM

வடக்கில் பணியின்றி வேதனம் பெற்ற 5 மருத்துவர்கள் - எம்.பியின் அதிரடிப் பணிப்புரை

வடக்கில் பணியின்றி வேதனம் பெற்ற 5 மருத்துவர்கள் - எம்.பியின் அதிரடிப் பணிப்புரை



வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் ஐந்து மருத்துவர்கள் எந்தவித பணியிலும் ஈடுபடாமல் வேதனம் பெற்றுள்ளமை தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாணத்திற்குட்பட்ட பல வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், அந்த வெற்றிடங்களை நிரப்ப மருத்துவர்கள் இல்லை என காரணம் தெரிவிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

எனினும், போஸ்ட் கிறாஜுவேட் "Postgraduate" பயிற்சி நிறைவுற்ற காலம் முதல் குறித்த ஐந்து மருத்துவர்களுக்கும் எந்த வைத்தியசாலைகளும் ஒதுக்கப்படாமல், அவர்கள் மாகாண சுகாதாரத் திணைக்களத்திலேயே தொடர்ந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேலதிகமாக காணப்படும் ஐந்து மருத்துவர்களையும் மருத்துவர்கள் பற்றாக்குறை காணப்படும் வைத்தியசாலைகளுக்கு உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிபவானந்தராயா பணிப்புரை வழங்கியுள்ளார்.

இந்த விவகாரம் வடக்கு மாகாண சுகாதார சேவைகளின் நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் பணியமைப்பு தொடர்பாக புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments: