News Just In

4/06/2026 10:52:00 AM

தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்­கி­டையில் பொது இணக்­கப்­பாடு அவ­சி­ய­மாகும்

தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்­கி­டையில் பொது இணக்­கப்­பாடு அவ­சி­ய­மாகும்


தமிழ் மக்­களின் அர­சியல் மற்றும் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னைகள் தொடர்பில் பொது­வான தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வ­தற்கும் கொள்­கை­களை வகுப்­ப­தற்கும் என இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியும், ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணியும் ஒன்­றி­ணைந்து 9 பேர­டங்­கிய இணைக்­கு­ழு­வொன்­றினை அமைத்­துள்­ளன.

கடந்த 28ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்தில் இரு கட்­சி­களின் தலை­வர்­களும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய நிலை­யி­லேயே இந்தக் குழு அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் சார்பில் மூன்று பேரும், ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணி­யி­லி­ருந்து ஆறு பேரும் என மொத்­த­மாக ஒன்­பது பேர் இந்தக் குழுவில் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

இந்தக் குழுவில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே. சிவ­ஞானம், செய­லாளர் எம்.ஏ. சுமந்­திரன் மற்றும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துரை­ரா­ஜ­சிங்கம் ஆகிய மூவரும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர்.
அதே­போன்று ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­டணி சார்பில் அந்தக் கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்­சி­களின் தலை­வர்­க­ளான புளொட் தலைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், ஜன­நா­யக புலிகள் கட்­சியின் தலைவர் வேந்தன், சமத்­துவக் கட்­சியின் தலைவர் எம். சந்­தி­ர­குமார் மற்றும் கூட்­ட­ணியின் செய­லாளர் இரட்­ண­லிங்கம் ஆகிய ஆறு பேரும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

இந்தக் குழு­வுக்கு தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் சி.வி.கே. சிவ­ஞா­னமும் ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணியின் செய­லாளர் இரட்­ண­லிங்­கமும் ஒருங்­கி­ணைப்­பா­ளர்­க­ளாக செயற்­ப­டு­வார்கள் என்றும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தமிழ்த் தேசியக் கட்­சிகள் மத்­தி­யி­லேயே ஒற்­றுமை, ஒரு­மைப்­பாடு ஏற்­பட வேண்டும் என்று தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. வடக்கு, கிழக்கில் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் பலம்­பெற்­றி­ருந்த காலப் பகு­தியில் 2001ஆம் ஆண்டு நான்கு தமிழ்க்கட்­சி­களை உள்­ள­டக்கி தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதில் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியை உள்­ள­டக்­கிய தமிழர் விடு­தலைக் கூட்­டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., அகில இலங்கை தமிழ்க் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் ஒன்­றி­ணைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அன்­றைய காலப் பகு­தியில் இடம்­பெற்ற தேர்­தல்­களில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது வடக்கு, கிழக்கில் பெரும்­பான்­மை­யான தமிழ் மக்­களின் ஆத­ரவைப் பெற்ற கட்­சி­யாக திகழ்ந்­தி­ருந்­தது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­பட்ட பிள­வுகள் கார­ண­மாக கட்­சிகள் வெளி­யே­று­வதும் உள்­வாங்­கப்­ப­டு­வ­து­மான நிகழ்­வுகள் இடம்­பெற்­றி­ருந்­தன.

ஆனாலும், 2020ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சித் தேர்தல் அறி­விப்­புடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாக செயற்­பட்ட கட்­சி­க­ளான ரெலோ, புளொட் என்­பன இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் முரண்­பட்டுக் கொண்டு கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்­தன. யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர், கூட்­ட­மைப்பில் அங்கம் வகித்த கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான அகில இலங்கைத் தமிழ்க் காங்­கிரஸ் வெளி­யே­றி­யி­ருந்­தது. அதன் பின்னர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி வெளி­யே­றி­யது. இந்த வெளி­யேற்­றங்­க­ளை­ய­டுத்து கூட்­ட­மைப்­புக்குள் புளொட் உள்­வாங்­கப்­பட்­டது.

இறு­தியில் தமி­ழ­ரசுக்கட்சி தனித்­தி­ருக்க, கூட்­ட­மைப்­பி­லி­ருந்து புளொட், ரெலோ என்­பன வெளி­யேறி ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­டணி என்ற கூட்­ட­மைப்பு ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி, சமத்­துவக் கட்சி என்­ப­னவும் இணைந்து கொண்­டி­ருந்­தன.

தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்­பாக தமிழ்த் தேசியக் கட்­சிகள் செயற்­பட்­டி­ருந்த போது வடக்கு, கிழக்கில் பெரும்­பான்­மை­யான தமிழ் மக்கள் அந்தக் கூட்­ட­மைப்பை ஆத­ரித்­தி­ருந்­தனர். ஆனால், கூட்­ட­மைப்­புக்குள் பிள­வுகள் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து நிலைமை தலை­கீ­ழாக மாறி­யி­ருந்­தது.

கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தேசிய மக்கள் சக்­தியின் பிர­வே­ச­மா­னது வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­மை­க­ளுக்கு சிறந்த பாடத்தை கொடுத்­தி­ருந்­தது. இந்தத் தேர்­தலில் வடக்கு, கிழக்கில் மட்­டக்­க­ளப்பு தவிர்ந்த ஏனைய சகல மாவட்­டங்­க­ளிலும் தேசிய மக்கள் சக்­தி­யா­னது பெரும்­பான்­மை­யான ஆச­னங்­களை பெற்­றி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து 2025ஆம் ஆண்டு முற்­ப­கு­தியில் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கட்­சிகள் தமது தவறை உணர்ந்து ஓர­ள­வுக்கு இணங்கிச் செயற்­பட்­ட­மை­யினால் தேசிய மக்கள் சக்­தியை விட ஓர­ள­வுக்கு வாக்­கு­களை பெறக் கூடிய நிலைமை வடக்கு, கிழக்கில் ஏற்­பட்­டி­ருந்­தது.

தமிழ்த் தேசியக் கட்­சிகள் தமிழ் மக்­களின் பொது­வான விட­யங்­க­ளி­லா­வது ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும் என்ற விட­யத்தில் பல்­வேறு தரப்­பி­னரும் அழுத்­தங்­களை கொடுத்து வந்­தனர்.

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு தொடர்­பிலும் அந்த மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னைக்­கான தீர்வு குறித்தும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்­தது. ஆனால், இது­வ­ரையில் இந்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

இந்த நிலையில் தமிழ் மக்­க­ளுக்­கான இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்­பிலும், தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு குறித்தும் தமிழ்த் தேசியக் கட்­சிகள் ஒரு­மித்த நிலைப்­பாட்­டுக்கு வந்து, பொது­வான திட்­ட­வ­ரைபை தயா­ரித்து அதன் மூல­மாக அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்­பாடு தற்­போது மேலோங்­கி­யுள்­ளது.

அத­ன­டிப்­ப­டையில் அர­சியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­மை­க­ளுக்கு இடையில் பொது இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்த வேண்­டி­யதன் அவ­சியம் தற்­போது உண­ரப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­மைகள் மத்­தியில் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சில தரப்­பினர் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்­களை சந்­திக்க வைப்­ப­தற்கு இலங்­கை­யி­லுள்ள சுவிட்­சர்­லாந்து தூத­ரகம் அண்­மையில் முயற்சிகளை மேற்­கொண்­டி­ருந்­தது. இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்­னணி, ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­டணி என்­ப­வற்றின் தலை­வர்­களை சந்­திக்க வைப்­ப­தற்கு முயற்சி எடுக்­கப்­பட்­டது. ஆனால், இறுதி நேரத்தில் அந்த முயற்சி கைகூ­டி­யி­ருக்­க­வில்லை.

தற்­போது, அந்த முயற்­சியில் தமிழ் சட்­டத்­த­ர­ணிகள் பேர­வை­யா­னது ஈடு­பட்டு வரு­கின்­றது. அண்­மையில் தமிழ் சட்­டத்­த­ர­ணிகளின் ஏற்­பாட்டில் தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளான இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி, ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­டணி, தமிழ் தேசிய மக்கள் முன்­னணி என்­ப­வற்றின் தலை­வர்­க­ளி­டையே சந்­திப்பு இடம்­பெற்­றி­ருந்­தது.

இதில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில் பொது இணக்­கப்­பாட்டை எட்­டு­வ­தற்கும் அது குறித்த ஆவ­ணத்தை தயா­ரிப்­ப­தற்கும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த முயற்சி தொடரும் நிலை­யில்தான் தற்­போது இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியும் ஜன­நா­யக தமிழ் தேசியக் கூட்­ட­ணியும் 9 பேர­டங்­கிய இணைக் குழுவை அமைத்­துள்­ளன. தமிழ் மக்­களின் பொது­வான விட­யங்­களில் பொது இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்தும் வகையில் இத்­த­கைய குழு இரு தரப்­புக்கும் இடையில் அமைக்­கப்­பட்­டுள்­ள­மை வர­வேற்­கத்­தக்க சிறந்த செயற்­பா­டாகும்.

இத்­த­கைய பொது இணக்­கப்­பா­டா­னது ஏனைய தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளு­டனும் ஏற்­பட வேண்டும். இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வாக இருக்­கலாம் அல்­லது தமிழ் மக்­களின் அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வாக இருக்­கலாம் எத்­த­கைய பொது விட­யங்­க­ளா­யினும் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­மைகள் தமக்குள் பொது நிலைப்பாடொன்றுக்கு வரவேண்டியது அவசியமானதாகும்.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் பல்வேறு முரண்பாடுகள் காணப்படலாம். நிலைப்பாடுகள் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகள் என்று வரும் போது, பொது நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். தற்போதைய நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ அல்லது புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் குறித்தோ அரசாங்கம் அக்கறை காண்பிப்பதாக இல்லை. ஆனாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்தும் அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான அவசியம் குறித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

அதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இந்த விடயத்தில் பொது இணக்கப்பாட்டை எட்ட வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

No comments: