News Just In

4/07/2026 07:48:00 PM

ஈரானின் முக்கியத்துவம் மிக்க கார்க் தீவில் வெடிப்பு சத்தங்கள்

ஈரானின் முக்கியத்துவம் மிக்க கார்க் தீவில் வெடிப்பு சத்தங்கள்



ஈரானின் முக்கியத்துவம் மிக்க கார்க் தீவில் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தீவிலிருந்துதான் நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து எண்ணெயும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என ஈரானின் அரை அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான மெஹ்ர் தெரிவித்துள்ளது.

"பல வெடிப்புகள்" நிகழ்ந்ததாக மெஹ்ர் செய்தி வெளியிட்டது, ஆனால் மேலதிக விவரங்களை வழங்கவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பலமுறை அந்தத் தீவின் மீது குண்டு வீசுவதாகவோ அல்லது அதைக் கைப்பற்றுவதாகவோ அச்சுறுத்தி வருகிறார்.

மார்ச் 30 அன்று, ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், "மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை அமெரிக்காவால் அழிக்க முடியும்" என்று அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: