News Just In

4/05/2026 06:20:00 PM

சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் சமூக செயற்பாட்டாளர்களை கௌரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வு..!

சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் சமூக செயற்பாட்டாளர்களை கௌரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வு..!



மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் சமூக செயற்பாட்டாளர்களை கௌரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று (04.04.2026) சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், கல்லடி உப்போடை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு சமாதான நீதிவான் சங்கத் தலைவர் திரு. உ. உதயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மதகுருமார்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களானசாணக்கியன் இராசமாணிக்கம், ஞா. சிறிநேசன்,
வைத்தியர் இ. சிறிநாத், க. பிரபு மேலும் மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன், தென் ஏருவில்பற்று தவிசாளர் வினோராஜ், பிராந்திய சுகாதார பணிப்பாளர் முரளீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமூக சேவையில் சிறந்து விளங்கும் செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

No comments: