
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்று அவதானிக்கப்பட்டது.
மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றிலேயே இவ்வாறு சடலம் இனங்கானப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments: