சம்மாந்துறையின் முன்னணி விளையாட்டு கழகங்களில் ஒன்றான நியூ சன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் “நியூ சன் மெகா இரவு 2026” மின் ஒளி கிரிக்கெட் தொடர் இன்று (05) சம்மாந்துறை பொது மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
விளையாட்டு ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற இத்தொடரின் அங்குரார்ப்பண விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. நிகழ்வின் முக்கிய அம்சமாக, போட்டித் தொடருக்கான உத்தியோகபூர்வ வெற்றிக்கிண்ணம் அதிதிகளால் திரைநீக்கம் செய்யப்பட்டு, தொடரின் ஆரம்பம் குறியிடப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் ஆரம்பப் போட்டிக்கான நாணயச் சுழற்சியை மேற்கொண்டு, போட்டியை உத்தியோகபூர்வமாக தொடங்கி வைத்தார்
இந்நிகழ்வில் நியூ சன் விளையாட்டுக்கழகத்தின் நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பெருமளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இம்முறை தொடரில் பல வலுவான அணிகள் பங்கேற்கின்றன. மின் ஒளியில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டிகள் அடுத்த சில நாட்களில் ரசிகர்களுக்கு பரபரப்பான மற்றும் சுவாரஸ்யமான போட்டிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்மாந்துறையில் விளையாட்டு பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்தொடர், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முக்கிய மேடையாகவும் அமைந்துள்ளது.
No comments: