News Just In

2/10/2026 09:02:00 AM

எல்லை தாண்டி வந்து பலாலி பொலிஸார் அட்டகாசம்; புன்னாலைக்கட்டுவனில் பரபரப்பு சம்பவம்!

எல்லை தாண்டி வந்து பலாலி பொலிஸார் அட்டகாசம்; புன்னாலைக்கட்டுவனில் பரபரப்பு சம்பவம்!




சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் - ஈவினை பகுதியில், எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் பொதுமக்களுடன் மோதலில் ஈடுபட்டதுடன் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் தனது காணிக்குள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த பலாலி பொலிஸார் அவர் மதுபோதையில் இருப்பதாகக் கூறி முரண்பட்டுள்ளனர்.

இதன்போது பொதுமகனின் ஆடையைக் கிழித்து வன்முறையில் ஈடுபட்டதுடன், மேலதிக பொலிஸாரை அவ்விடத்திற்கு வரவழைத்து அட்டகாசம் செய்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குள் பலாலி பொலிஸார் அத்துமீறி நுழைந்துள்ளனர்.அருகிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து வருபவர்களிடம் இலஞ்சம் பெறுவதற்காகவே இப்பகுதியில் பொலிஸார் அடிக்கடி நிற்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெயர் மற்றும் தகட்டு இலக்கங்களை மறைத்துச் செயற்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸார் மதுபோதையில் இருந்ததாகவும், பொதுமக்கள் இதனைத் தட்டிக்கேட்டு காணொளி எடுக்க முயன்றபோது அதனைத் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தமக்குத் தொடர்ச்சியாகத் தொந்தரவு கொடுத்து வரும் பலாலி பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து உரிய அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: