News Just In

1/22/2026 01:43:00 PM

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் : மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் : மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!


திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பில், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு தேரர்களை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி பிறப்பித்த உத்தரவின் எழுத்துப்பூர்வ நகல் மற்றும் காணொளி பதிவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.

கஸ்ஸப தேரர் மற்றும் பலர் தங்கள் விளக்கமறியலுக்கு எதிராக தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மனுவை இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மறுபரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments: