News Just In

1/20/2026 04:18:00 PM

இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனைக்கு தடை !

இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனைக்கு தடை - உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் மூடவும் தீர்மானம்!



பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னாலுள்ள இராணுவ சிற்றுண்டி சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச் சிற்றுண்டி சாலையை மூடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் காலை 9:30 மணியளவில் அக வணக்கத்துடன் நகர சபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளதுடன் கனரக வாகனங்கள் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன் காலை 6:45 மணிக்கும், 8:00 மணிவரையும், முடிவடையும் நேரத்தில் காலை 12:00 மணிமுதல் 2:00 மணிவரை பயணிக்க தடை விதிப்பதென்றும், புதிய ஜேசிபி இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்வது தொடர்பாக npp உறுப்பினர் அனல் ரெஜி அவர்களால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அதன் தேவைபாடு தொடர்பான ஆய்வுக்கு பின்னர் அடுத்த கூட்டத்தில் ஆராய்வது என்றும், மரக்கறி சந்தை மீண்டும் நவீன சந்தை தொகுதிக்கு மாற்ற பட்டமையால் ஏற்கனவே குத்தகைக்கு வழங்கப்பட்டவருக்கு வழங்குவது என்றும்,

முனையில் அமைந்துள்ள சிறுவர் மகிழ்வகத்திற்கு வருகை தருவோர்க்கு ரூபா 20 பணம் அறவீடு பரீட்சாத்தமாக 3 மாதம் வரை அறவிடுவது என்றும், மகிழ்வகம் காலை 9:00 மணியிலிருந்து மாலை 9:00 மணிவரையும் திறப்பது என்றும்,

முனை வெளிச்ச வீடு திருத்தபட்டு பார்வை யாளர்களிடமிருந்து கட்டணம் அறவிடுவது என்றும், இடையூறாக நிறுத்தப்படும் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊர்திகளுக்கு உடனடி தாண்டாமாக ரூபா 2000 அறவிடுவது என்றும், நகரசபை விதிகளை மீறி வியாபாரத்தில் ஈடுபடுவோர்க்கும், மரக்கறி சந்தையிலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் மரக்கறி மற்றும் சந்தை பொருட்கள் விற்பனை செய்வோர்க்கும் ரூபா 2000 தண்டம் அறவீடு செய்வது, சட்ட நடவடிக்கை எடுப்பது என்றும்,

கைப்பற்ற பட்ட பொருட்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பது என்றும், நகர சபை எல்லைக்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதனை ஊக்கிவிப்பதென்றும், இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில்அமைந்துள்ள நிலையில் இராணுவத்தின் சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் விற்பனை செய்வத்தை தடை செய்வதென்றும், குறித்த இராணுவம் நகரசபை சட்டங்களுக்கு உட்பட்டு உரிய அனுமதி பெறப்படாது இயங்குவதால் அதற்கான உரிய அனுமதி பெறப்படவில்லை எனில் அவ் இராணுவ சிற்றுண்டி சாலையை மூடுவது என்றும் தீர்மானங்கள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் இவ் ஆண்டுக்கான புதிய நிதிக்குழு, சுகாதாரக் குழு, பெறுகை குழு உட்பட பல குழுக்களும் தெரிவு செய்யப்பட்டன.




இற்றைய அமர்வில் 15 உறுப்பினர்கள் உள்ள சபையில் 14 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: