News Just In

1/26/2026 03:15:00 PM

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள தங்கத்தின் விலை!

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள தங்கத்தின் விலை


உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (26) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இலங்கையில் ஒரு மாதத்திற்குள் ஒரு பவுண் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 30,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


24 கரட் தங்கத்தின் விலை இன்று 397,000 ஆக பதிவானதாகியுள்ள நிலையில்,இந்த மாத தொடக்கத்தில், அதன் விலை 368,425 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கத்தின் விலை இன்று 367,000 ரூபா ஆக பதிவானதாகியுள்ள நிலையில், மாத தொடக்கத்தில் 340,400 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் ஜனவரி 19 அன்று ரூ. 385,000 ஆக இருந்த ஒரு தங்க நெக்லஸ் இன்று ரூ. 400,000 ஐத் தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய, தங்கப் பொருளின் குறைந்தபட்ச விலை ரூ. 395,000 இல் தொடங்குகிறது என்று சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments: