News Just In

1/26/2026 03:11:00 PM

சிறந்த விபரண கட்டுரைக்கான தேசிய விருது பெற்ற நூருல் ஹுதா உமருக்கு இலக்கியவாதிகள் கூடிய அவையில் கௌரவம்

சிறந்த விபரண கட்டுரைக்கான தேசிய விருது பெற்ற நூருல் ஹுதா உமருக்கு இலக்கியவாதிகள் கூடிய அவையில் கௌரவம்


சிறந்த விபரண கட்டுரைக்கான தேசிய விருதை தமிழன் பத்திரிகையின் சார்பில் பெற்ற எழுத்தாளர் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் அவர்களுக்கு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் ஆகியோர் இணைந்து சிறப்பான கௌரவம் வழங்கினர்.

நாடறிந்த கவிஞர், சிரேஷ்ட சட்டத்தரணி அலறி றிபாஸின் "தந்தனக்கிளி" நூல் வெளியீட்டு விழா நிகழ்வு சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் கல்முனை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் எம்.எஸ்.எம். ஜெமீல் தலைமையில் நடைபெறுகையில், தமிழ் எழுத்துலகில் விபரணக் கட்டுரைகளின் தரத்தையும் சமூகப் பொறுப்பையும் உயர்த்தியமைக்காக நூருல் ஹுதா உமரின் பங்களிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு சட்டத்தரணிகள், எழுத்தாளார்கள், இலக்கியவாதிகள் முன்னியிலையில் பொன்னாடை போத்தி ஹரீஸ், ஜவாத், சபீஸ் ஆகியோர் பணப்பரிசு வழங்கி, நூருல் ஹுதா உமரின் இலக்கியப் பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இவ்விருது இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு ஊக்கமாகவும், சமூக மாற்றத்தை நோக்கிய எழுத்துக்களுக்கு அங்கீகாரமாகவும் அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் நாயகம் இலக்கிய விமர்சகர் மன்சூர் ஏ காதிர், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினர் இலக்கிய விமர்சகர் சிராஜ் மசூர், கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவி ஆரிகா ஷரீக் காரியப்பர், உட்பட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள், கல்விமான்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: