News Just In

1/26/2026 05:21:00 PM

திடீர் இடைநீக்கம்.. அநுர அரசிற்கு ஏற்படப் போகும் புதிய நெருக்கடி!

திடீர் இடைநீக்கம்.. அநுர அரசிற்கு ஏற்படப் போகும் புதிய நெருக்கடி



இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம், சட்டத்தரணி சமிந்த குலரத்ன, தனக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி நான்கு சர்வதேச அமைப்புகளிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று இதனை சுட்டிக்காட்டி செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம், கொமன்வெல்த் நாடாளுமன்ற சங்கம், நாடாளுமன்றங்களின் பொதுச் செயலாளர்களின் சர்வதேச மன்றம் மற்றும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றிடம் முறைப்பாடுகள் அளிக்கப்படவுள்ளன.

மேலும், நாடாளுமன்ற ஊழியர்களில் இரண்டாவது மூத்த அதிகாரியான அவர் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால், முதற்கட்ட விசாரணைக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் தனது வழக்கை முன்வைக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்யாமல் திடீரென அவரை இடைநீக்கம் செய்ததன் மூலம், சபாநாயகர் நீதியின் கொள்கைகளை கூட மீறியுள்ளதாக குறித்த முறைப்பாடுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேநேரம், சமிந்த குலரத்னவின் சார்பாக, நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி குழு இந்தப் முறைப்பாடுகளை தயாரித்து வருவதாக அறியப்படுகிறது.

சர்வதேச அமைப்புகளிடம் முறைப்பாடு அளிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யவும் சட்டத்தரணிகள் குழு செயல்பட்டு வருவதாக குறித்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

No comments: