News Just In

1/26/2026 05:24:00 PM

2019 ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் : உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

2019 ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் : உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு



2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை கிடைத்திருந்தும் தடுக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மார்ச் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது

குறித்த உத்தரவானது கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் ஆரம்ப விசாரணையின் போது

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இன்று நடைபெற்ற வழக்கின் ஆரம்ப விசாரணையின் போது, ​​ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜெயசுந்தர இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: