News Just In

1/27/2026 11:51:00 AM

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் சம்மாந்துறைக்கு விஜயம்!

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் சம்மாந்துறைக்கு விஜயம்


நூருல் ஹுதா உமர்

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ருவன் ரணசிங்க தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை (26) சம்மாந்துறை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தின் போது, இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மல்காந்தி ராஜபக்சவும் குழுவுடன் இணைந்து சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபாவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

இக் கலந்துரையாடலில் சம்மாந்துறை பிரதேசத்தின் சுற்றுலா வளங்கள், சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான சாத்தியங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உதவிப் பிரதேச செயலாளர் வி. வாசித் அஹமட் உட்பட சுற்றுலாத்துறை அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு, பிரதேச சுற்றுலா மேம்பாட்டுக்கான நடைமுறை அம்சங்கள் தொடர்பில் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

இந்த விஜயம், சம்மாந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலாத்துறையை வளர்ச்சியடையச் செய்யும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments: