News Just In

1/22/2026 01:24:00 PM

கிரீன்லாந்து தொடர்பான வரி திட்டத்திலிருந்து விலகிய ட்ரம்ப் - தங்கம் விலை சரிவு

கிரீன்லாந்து தொடர்பான வரி திட்டத்திலிருந்து விலகிய ட்ரம்ப் - தங்கம் விலை சரிவு


கிரீன்லாந்து தொடர்பான வரி திட்டத்திலிருந்து ட்ரம்ப் விலயத்தைத் தொடர்ந்து தங்கம் விலை குறைந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகளுக்கு விதிக்கத் திட்டமிட்டிருந்த வரிகளை திரும்ப பெற்றதுடன், கிரீன்லாந்து தொடர்பான “புதிய ஒப்பந்த வடிவமைப்பு” குறித்து அறிவித்தார். இதன் பின்னர், உலக சந்தையில் தங்கத்தின் விலை சரிவை சந்தித்தது.

ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, தங்கம் 1.1 சதவீதம் வரை குறைந்துள்ளது.

மூன்று நாட்கள் தொடர்ந்து உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 4,888 அமெரிக்க டொலர் என்ற சரித்திர சாதனையை எட்டிய நிலையில், இப்போது விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ட்ரம்ப், நேட்டோ செயலாளர் மார்க் ருட்டேவை சந்தித்த பின் சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கிரீன்லாந்து தொடர்பான அவரது “பிரிங்க்மான்ஷிப்” நடவடிக்கைகள், ஐரோப்பாவுடன் தூதரக நெருக்கடியை உருவாக்கி, நிதி சந்தைகளில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.

அவரது சமீபத்திய கருத்துகளுக்குப் பின், அமெரிக்க டொலர் மற்றும் பங்குச் சந்தைகள் மீண்டும் சற்றே மீண்டன. Bloomberg Dollar Spot Index 0.1 சதவீதம் உயர்ந்தது.

கடந்த ஒரு ஆண்டில் தங்கம் 70 சதவீதம் அதிகரித்து, தொடர்ந்து புதிய சாதனைகளை எட்டியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க மத்திய வங்கியை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால், டொலரின் மீது நம்பிக்கை குறைந்து, தங்கம் போன்ற மதிப்புமிக்க உலோகங்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

No comments: