News Just In

1/03/2026 09:54:00 AM

நுஜா ஊடக அமைப்பின் 21வது ஆண்டு மகிழ்ச்சிப் பெருவிழா!

நுஜா ஊடக அமைப்பின் 21வது ஆண்டு மகிழ்ச்சிப் பெருவிழா!


அபு அலா

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) 21வது ஆண்டு நிறைவு மகிழ்ச்சிப் பெருவிழா (31) அட்டாளைச்சேனை சாரா பீச் மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வருமான, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக, அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமான எஸ்.எம்.சபீஸ், சிரேஸ்ட வைத்தியர் திருமதி சித்ரா தேவராஜன், அக்கரைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் முகம்மட் பைறூஸ், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினர் சபூர் ஆதம், மொறிச் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.பீ.எம்.நழீம், அட்டாளைச்சேனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஜூனைதீன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கவிஞரும், சமூக சேவையாளரும், சட்ட கலைமாணி, மனித உரிமைகள் சட்ட முதுகலைமாணி மற்றும் குற்றவியல் நீதியும் சீர்திருத்தங்கள் எனும் துறையில் இலங்கையில் முதலாவது முஸ்லிம் முதுகலை மாணியுமான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அக்கரைப்பற்றூர் அப்துல் கபூர் முகம்மது ஜகீபர், மொறிச் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.பீ.எம்.நழீம், அக்கரைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் முகம்மட் பைறூஸ், அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ்.ஜூனைதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல்.அலியார், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.எம்.ஹமீட் ஆகியோர் இவ்விழாவின்போது பொன்னாடை போர்த்தி பதக்கம் அணிவிக்கப்பட்டு பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.



மேலும், நுஜா அமைப்பின் பிரதித் தலைவர் ஏ.எல்.றமீஸ், உப தலைவர்களான எஸ்.எல்.மன்சூர், எஸ்.எல்.எம்.அபூபக்கர், தேசிய அமைப்பாளர் பைஷல் இஸ்மாயில், செயலாளர் முஸ்தாக் முகம்மட், அங்கத்தவர்களான நிலாவளி முபீன் ரபீட், பாத்திமா அப்ரின், ஏ.சீ.றியாஸ், கிதுர் முகம்மட், எம்.பாஸித் ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

நுஜா ஊடக அமைப்பின் கடந்த 21 வருட வரலாற்றுப் பார்வையை மிகவும் தெளிவான முறையில் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் எடுத்துரைத்தமையும் குறிப்பிடத்தக்கது

No comments: