
தையிட்டி விகாரைக்கு கொண்டு வரவிருந்த புத்தர் சிலை ஒன்று இராணுவத்தினரின் உணவகத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கையானது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காங்கேசன்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் பிக்கு ஒருவரிடம் வாக்குமூலம் எடுப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்றையதினம்(03.01.2026) யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: