கிளிநொச்சியில் இந்திய அரசின் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்!
வெள்ளம் மற்றும் அழிவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசு தொடங்கிய Sagar Bandhu ஒரு மனிதாபிமான உதவி நடவடிக்கையின் ஒர் அங்கமாக அனர்த்தத்தின் பாதிப்பிற்குள்ளான பொதுமக்களுக்கென இந்திய அரசாங்கம் உலர் உணவு பொதிகளை வழங்கி இருந்தது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்விற்கு யாழ்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு வருகை தந்து உலர் உணவுப்பொதிகளை நேரடியாக பொதுமக்களுக்கு கையளித்திருந்தனர்.
இந் நிகழ்வில் மேலதிக அரச அதிபர்,மேலதிக அரச அதிபர் (காணி)மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு உதவிப்பணிப்பாளர், பிரதம கணக்காளர்,நிர்வாக உத்தியோகத்தர்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள்,பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.
No comments: