News Just In

12/12/2025 08:43:00 AM

பேரிடரின் போது பலரின் உயிர்களை காப்பாற்றிய இளம் யுவதி திடீரென மரணம்

பேரிடரின் போது பலரின் உயிர்களை காப்பாற்றிய இளம் யுவதி திடீரென மரணம்



அண்மையில் ஏற்பட்ட பேரிடரின் போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

களனி கங்கையின் ராணியாக முடிசூட்டப்பட்ட சேதவத்தை, கோட்விலாவைச் சேர்ந்த யுவதியான ஓஷாதி வியாமா என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.

நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் படித்து வந்த அவர் 19 வயதில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சமீபத்திய வெள்ளத்தின் போது இடம்பெயர்ந்த தனது அண்டை வீட்டு மக்களை காப்பாற்றவும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல, இரவுபகலாக படகில் பணியாற்றி, பெரிய தியாகத்தை செய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளார்.

ஓஷாதி தனது 3 வயதிலிருந்தே நீச்சல் கற்றுக்கொண்டார். குறித்த யுவதி தனது 7 வயதில் 14 நிமிடங்கள் 41 வினாடிகளில் களனி ஆற்றின் குறுக்கே 1000 மீட்டர் நீந்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

ஓஷாதியின் சாதனையை காண கிராமவாசிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அன்றையதினம் களனி ஆற்றின் இருபுறமும் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: