
மன்னார் - மூர்வீதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றில் கொத்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான ரொட்டி, யூரியா பை ஒன்றில் அழகாக சுருட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுகாதார துறையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் தொடர்பில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு தொடர்சியாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை தொடர்ந்து நேற்றைய தினம் மூர்வீதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அதேநேரம் குறித்த உணவகம் அனுமதி இன்றி இயங்கி வந்ததுடன் உணவகத்தில் பணிபுரியும் நபர்கள் சுகாதார அனுமதி கூட பெறாமை கண்டறியப்பட்டிருந்தது
அத்துடன் குறித்த உணவகத்தில் அசுத்தமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டமை,அசுத்தமானவிதமாகஉணவுகள்களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை, கழிவு நீர் ஒழுங்காக வெளியேற்றப்படாமை, உணவு தயாரிப்பவர்கள் கையுறை, தலையுறை பயன்படுத்தாமை போன்ற பல்வேறு சுகாதார குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த உணவகத்துக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது
அதே நேரம் நேற்றைய தினம் எழுத்தூர் பகுதியில் அமைந்திருந்த ஒரு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள் காணப்பட்டமை, பொருட்கள் ஒழுங்கான முறையில் சுத்தம் செய்யப்பட்டிருக்காமை,
எண்னை வகைகள் ஒழுங்கான முறையில் களஞ்சியப்படுத்தப்படாமை கண்டறியப்படாத நிலையில், குறித்த வியாபார நிலையத்துக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: