அனர்த்தங்கள் உருவான முதல் நொடியில் இருந்தே மனித உயிர்களை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்கள். இந்திய விமானப்படை வீரர்கள், காவல்துறையினர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் மருத்துவ குழுக்கள். தீயணைப்பு சேவைகள், தன்னார்வ அமைப்புகள், அரசு அதிகாரிகள், மற்றும் தொண்டர்கள் ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன் அவர்களின் அர்ப்பணிப்பு செயல்பாடுகள் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது என ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர் ஊடக அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும், இலங்கையின் பல பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு பலத்த காற்று, மினி சூறாவளி போன்ற பரவலான இயற்கை அனர்த்தங்களால் பல குடும்பங்கள் மிகுந்த இழப்பு மற்றும் வேதனைகளைச் சந்தித்து வருகின்றன. பல உயிரிழப்புகளும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்வதும், வாழ்வாதாரத்தைக் களைத்துக் கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளதை நான் ஆழ்ந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.
இந்த பேரழிவுகளில் உயிரிழந்த அன்பு குடிமக்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் மனஅமைதி நிலைநிறுத்த இறைவனின் அருளையும் பிரார்த்திக்கின்றேன். அதேபோல் காயமடைந்தோர் விரைவில் குணமடைந்து தங்கள் இயல்பான வாழ்வுக்கு திரும்ப மன வலிமையும் உடல் நலனும் தரும் வகையில் இறைவன் அருள் புரிவதாக வேண்டுகின்றேன்.
அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உடனடி நஷ்டஈடு வழங்கப்படுவதுடன் தற்காலிக தங்குமிடங்கள். உணவு தண்ணீர், மருந்து அவசர தேவைகள் உடன் நிறைவேற்றப்பட வேண்டும். வீட்டு சேதங்கள், விவசாய இழப்புகள். சொத்து நஷ்டங்கள் தொடர்பான சரியான மதிப்பீடு செய்யப்பட்டு உரிய நஷ்ாடுகளை அரசியல் வேறுபாடுகள் இன்றி தாமதமின்றி வழங்கவேண்டும் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நீட்சியான பாதுகாப்பு நடவடிக்கைகள் சீராக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை நிலைநிறுத்துவது இன்று தேசத்தின் முதன்மை கடமையாகும்
எதிர்கால பேரழிவுகளைத் தடுக்க தேசிய அளவிலான தீர்வுகள் தேவையாகும். காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இயற்கை அனர்த்தங்கள் ஆண்டுதோறும் தீவிரமடைந்து வருகின்றன. இதனை தடுக்க நிபுணர்கள் பரிந்துரைக்கும் அறிவியல் சார்ந்த நீண்டகால திட்டங்கள் அமுல்படுத்துவது அவசியமாகும். வடிகால் அமைப்புகளின் மேம்பாடு, ஆறுகள், குளங்கள், நீர்ப்பாசன அமைப்புகள் சீரமைப்பு, திட்டமிடாத நிலப் பயன்படுத்தல்களை கட்டுப்படுத்துதல், அவசர நிலை மேலாண்மையை மேம்படுத்துதல், அரசியல் வேறுபாடுகளை மீறி தேசிய ஒருமைப்பாட்டுடன் செயல்பட வேண்டியது அவசியம் இந்த அனர்த்தங்கள் நமக்கு ஒரு தேச ஒற்றுமை, மனிதாபிமானம் மற்றும் முன்னேற்பாட்டு முக்கியத்துவத்தை நினைவூட்டுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ளவும். அவர்களை மீண்டும் வாழ்வு நிலைக்கு அழைத்துச் செல்லவும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது நமது கூட்டுப் பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்
No comments: