News Just In

12/03/2025 04:03:00 PM

கிழக்கில் மாபெரும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் சாணக்கியன் தலைமையில்..!

கிழக்கில் மாபெரும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் சாணக்கியன் தலைமையில்..! செயல்வீரர்களாக களத்தில் மக்களோடு.



காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்களுக்கான பாரியளவிலான நிவாரணப் பணிகள் இன்று எனது தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அனர்த்தம் ஏற்பட்ட போதும் நிவாரணப் பணிகள் இவ்வாறே எம்மால் எமது மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றன. இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்தை விட மலையகத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களிலே குடியிருக்கும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் போது தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M A சுமந்திரன் அவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட போது இவ் நிவாரணம் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

அத்துடன் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டக்களப்பு மாநகர சபையானது நிவாரண சேகரிப்பில் குறிப்பாக மட்டக்களப்பில் கட்சி பேதமின்றி அனைவரினதும் குறிப்பாக மக்களின் பேராதரவுடன் ஈடுபட்டுள்ளது. முடியுமான மக்கள் தம்மால் முடிந்த உதவியினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் என்றும் களத்தில் நிற்கும் செயல் வீரர்கள். பிழையானதை பிழை என்றும் சரியானதை சரி என்றும் கூறுபவர்கள்.

No comments: