News Just In

12/23/2025 11:58:00 AM

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்



உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை (23) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை முதல் முறையாக 4,400 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

தற்போது 4,500 அமெரிக்க டொலர்களை நெருங்கி வருவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த திடீர் விலை உயர்வை பல காரணிகள் முக்கியமாக பாதித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன்படி, அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) அடுத்த ஆண்டு அதன் வட்டி விகிதங்களை மேலும் குறைக்கும் என்ற முதலீட்டாளர்களிடையே நிலவும் வலுவான நம்பிக்கை, உலகளவில் இடம்பெற்று வரும் பல்வேறு இராணுவ மற்றும் வர்த்தக மோதல்களின் காரணமாக பாதுகாப்பான முதலீடாக தங்கத்திற்கான தேவை அதிகரித்துவருதல், மேலும் உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்பட்ட சிறிய சரிவு ஆகியவை தங்கத்தின் விலையை ஆதரிக்கும் முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.

No comments: