நூருல் ஹுதா உமர்
கல்முனை பிரதேசத்தில் அடிக்கடி நிலவி வரும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை மற்றும் மின்சார தடை காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் நோக்கில், சமூக நலப்பணிகளில் முன்னணியில் செயல்பட்டு வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஒரு முக்கியமான மனிதநேய உதவியை மேற்கொண்டுள்ளது.
யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு, உடனடி தீர்மானம் எடுத்து மின்தோற்றி (Generator) ஒன்றை கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபக தலைவரும், கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் வழங்கி வைத்தார்.
இந்த உத்தியோகபூர்வ மின்தோற்றி வழங்கும் நிகழ்வு அன்று கல்முனை யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசனின் உறுப்பினர்கள், யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தற்போதைய சவாலான சூழ்நிலையில், ஜனாஸா தொடர்பான சேவைகள் உள்ளிட்ட அவசியமான சமூக பணிகளை இடையூறின்றி முன்னெடுக்க இந்த மின்தோற்றி பெரிதும் உதவியாக இருக்கும் என யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினர் தெரிவித்தனர்.
மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த மனிதநேய செயல், சமூகத்தில் பெரும் நம்பிக்கையையும் நிவாரணத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்
No comments: