News Just In

12/15/2025 06:05:00 PM

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 5000 கொடுப்பனவு !

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 5000 கொடுப்பனவு !



திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் முன்பிள்ளை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் ஊடாக வழங்கப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான (04 மாதங்கள் வரை) பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போசாக்கு போசாக்கு பொதிக்கான வவுச்சர் இன்று (15)வழங்கி வைக்கப்பட்டன.

ரூபா 5000.00 பெறுமதியான குறித்த வவுச்சர் வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கல்மெடியாவ தெற்கு கிராமிய வைத்தியசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த போசாக்கு பொதிக்கான வவுச்சரானது ஒரு முறை மாத்திரம் விசேட பண்டிகைக்கால வவுச்சராக வழங்கப்பட்டுள்ளது.

2025 நவம்பர் 30ம் திகதிக்குள் மகப்பேற்று கிளினிக்குகளில் பதிவு செய்த கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு (04மாதங்கள் வரை) அனைவரும் இதனை பெற்றுக் கொண்டனர்.

தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ,தம்பலகாமம் பிரதேச செயலகம் இணைந்து இதனை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர்.

முள்ளிப்பொத்தானை,கல்மெடியாவ தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்தவர்கள் இன்றைய தினம் குறித்த வவுச்சர்களை பெற்றுக் கொண்டனர்.

குறித்த வவுச்சர்களை அன்றைய தினமே உரிய போசாக்கு பொதிக்கான உபகரணங்களை அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நிருவாக உத்திதோகத்தர்,தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்

No comments: