News Just In

11/06/2025 03:36:00 PM

கல்முனை கல்வி வலயத்தில் முதல் முதலாக பாடசாலை ரக்பி அணி கல்முனை ஸாஹிராவில் உதயம் !

கல்முனை கல்வி வலயத்தில் முதல் முதலாக பாடசாலை ரக்பி அணி கல்முனை ஸாஹிராவில் உதயம் !


நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாண, கல்முனை கல்வி வலயத்தில் முதன்முதலாக பாடசாலை ரக்பி அணி கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஸாஹிரா ரக்பி அணியின் சீருடையை அறிமுகம் செய்யும் நிகழ்வு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் ரக்பி அணியின் பொறுப்பாசிரியர் எம்.எம். றஜீப்பின் நெறிப்படுத்தலில் இன்று (06) இடம்பெற்றது.

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை எம்.ஏ. ஸ்போர்ட்ஸ் நிறுவன நிறுவனர் முஹம்மட் அஸ்ஹாம் கலந்து கொண்டு ஸாஹிரா ரக்பி அணியின் சீருடையை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஏ.எல்.எம்.தன்ஸீல் விளையாட்டு பயிற்றுவிப்பாளர், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஸாஹிரா ரக்பி அணியினருக்கு மூன்று மாதங்களுக்கு மேலாக ரக்பி அணியின் பொறுப்பாசிரியர் எம்.எம். றஜீப், தேசிய போட்டிகளில் விளையாடிய வீரரும், பயிற்றுவிப்பாளர் பயிற்சிகளை பெற்றவருமான ரக்பி பயிற்றுவிப்பாளர் ஏ.பி.எம். இல்ஹாம் ஆகியோர் தொடர் பயிற்சிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: